என் மலர்
சினிமா செய்திகள்

கண்ணகி நகர்- திரைவிமர்சனம்
சுனாமியல் குடும்பத்தை இழந்த நாயகன் கௌதம் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தீபா உமாபதியை ஐந்து பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொன்றதாக கௌதமுக்கு தகவல் கிடைக்கிறது. இதை அறிந்த கௌதம் அவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.
இறுதியில் தீபாவிற்கு என்ன ஆனது? அந்த ஐந்து பேர் யார்? கௌதம் அவர்களை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் கௌதம், கண்ணகி நகர் மொழியை உள்வாங்கி, முக பாவனைகளில் வெளிப்படுத்துகிறார். நாயகியான தீபா உமாபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எல்லா உறவுகளையும் இழந்த பின்பு ஒரு மனிதனின் கடைசி முடிவு என்ன என்பதை மக்களுக்கு காட்டியிருகிறார் இயக்குனர் குணா. சென்னை தமிழ், கண்ணகி நகர், காட்சிப்படுத்திய விதம் அருமை. வலுவான காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலவீனம்.
இசை
தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
பா.மு.முஹம்மது ஃபர்ஹான் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ரேட்டிங்- 2/5






