என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாயகனை விட தக் லைஃப் பெரியதாக இருக்கப் போகிறது- கமல்
    X

    நாயகனை விட தக் லைஃப் பெரியதாக இருக்கப் போகிறது- கமல்

    • நாளைமறுதினம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • உலகமெங்கும் வருகிற ஜூன் 5ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பின் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். கமலுடன் சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. பான் இந்தியா படமாக தக் லைஃவ் உருவாகியுள்ளது. தற்போது படத்திற்கான புரொமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

    இன்று நடைபெற்ற தெலுங்கு புரொமோஷன் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பேசுகையில் "தக் லைஃப் நாயகனை விடப் பெரியதாக இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அதை நாங்கள் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நான் பார்த்ததிலிருந்து, அது அப்படியே இருக்கப்போகுது.

    சுஹாசினி மணி ரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். நாங்கள் சினிமா மூலம் திருமணம் செய்து கொண்டோம். சிலம்பரசன் சிறுவயதில் தற்போது வரை நடித்துள்ள படங்களை நான் பார்த்துள்ளேன். நாசர் ஒரு ஆல்ரவுண்ட் நடிகர்" என்றார்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    Next Story
    ×