என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா மீண்டும் புகார்
    X

    மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா மீண்டும் புகார்

    • டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்று தெரிவித்து இருந்தார்.
    • இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வை எட்ட போலீசார் உதவி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார்.

    அதில், 'மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், நான் குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனது 2 குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள பணம் தேவைப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வை எட்ட போலீசார் உதவி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×