என் மலர்
சினிமா செய்திகள்

"அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது" ; 'கடுக்கா' படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் பாராட்டு
- கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கடுக்கா".
- பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கடுக்கா".
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்
ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் பேசியதாவது…
படத்தை முழுதாக நான் பார்த்துவிட்டேன். தந்தை பெரியார் கருத்தை அழகாகவும், சிறப்பாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள்.
நடிகர் சௌந்தர்ராஜா பேசியதாவது….
கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். தயாரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…
இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது என்னுடைய அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது.. சின்ன படங்கள் எடுப்பதில் படம் எடுப்பதைத் தாண்டி படத்தை விளம்பரப் படுத்துவதில் தான் இருக்கிறது.. அதை மிகச்சிறப்பாக தனஞ்செயன் சார் செய்து வருகிறார்.. அவர் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
நடிகர்கள் : விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர்
தொழில் நுட்ப குழு
இயக்குநர் : SS முருகராசு
இசையமைப்பாளர்: கெவின் டெகோஸ்டா
ஒளிப்பதிவாளர்: சதீஸ் குமார் துரைக்கண்ணு
எடிட்டர் : M.ஜான்சன் நோயல்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான்
நடன அமைப்பாளர்: அபேப் R.K
இணை இயக்குநர்: R.ஐய்யனார், ரமேஷ் பாஷா
இணை இயக்குநர்: சரண் K.ஆறுமுகம்
உதவி இயக்குநர்: ஆறுமுகம், பிரதாப் சிங்
DI: கலர் வேவ்ஸ்
கலரிஸ்ட் : ராகவன்
VFX: Issls ஸ்டுடியோ
உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர்
உதவியாசிரியர்: லோகேஷ்ராஜா, சாம்ராஜா
விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ்
விநியோகம் : G.தனஞ்செயன்
மக்கள் தொடர்பு : கேப்டன் M P ஆனந்த்






