என் மலர்
சினிமா செய்திகள்

இரவின் விழிகள்- திரைவிமர்சனம்
யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இன்ப்ளூயன்சராக இருக்கிறார் நாயகன் மற்றும் சிலர். தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற யூடியூப் இன்ப்ளூயன்சர்களை தேர்ந்தெடுக்கும் மர்ம நபர் கடத்தி கொலை செய்கிறார். இதுபோன்று, யூடியூப் இன்ப்ளூயன்சரான நாயகனும் கடத்தப்படுகிறார்.
மர்மமாக கொலை செய்யும் தொடர் கொலையாளி யார்? கொலையாளியின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதையின் நாயகனாக வரும் மஹேந்திரன் கதாப்பாத்திற்கு ஏற்ப இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி நீமா ரேய் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார். படம் முழுவதும் தொய்வு இருக்கிறது. படம் எடுக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார். இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு
காட்சிகளை நேர்த்தியாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ரேட்டிங்- 1/5






