'இட்லி கடை' ஓடிடி அப்டேட்!

இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
'இட்லி கடை' ஓடிடி அப்டேட்!
Published on

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும்.

தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 29-ந்தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com