என் மலர்
சினிமா செய்திகள்

கட்டுக்கடங்காத கூட்டம்... நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள் - அதிர்ச்சி வீடியோ
- தி ராஜா சாப் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது.
- கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் அடுத்தாண்டு ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்போது இபபடத்தில் நிதி அகர்வாலுடன் பிரபாஸின் காதல் பாடலான 'சஹானா' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
இந்த வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்புகளை மீறி நடிகை நிதி அகர்வாலை பார்க்க முன் வந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






