போதை-ல இருந்தாலும் Duty-ல இருப்பாரு.. கிச்சா சுதீப்பின் 'மார்க்' தமிழ் டிரெய்லர்

அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள்.இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும்.
போதை-ல இருந்தாலும் Duty-ல இருப்பாரு.. கிச்சா சுதீப்பின் 'மார்க்' தமிழ் டிரெய்லர்
Published on: 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, நானியின் 'நான் ஈ' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும். இந்த படத்திற்கு மார்க் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மார்க் படத்தின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.   

X

Maalai Malar
www.maalaimalar.com