VIDEO: கருத்த மச்சான் பாடல் - இணையத்தில் வைரலான மமிதா பைஜூவின் நடன வீடியோ

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.டியூட் படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.83 கோடி வசூலை குவித்துள்ளது.
VIDEO: கருத்த மச்சான் பாடல் - இணையத்தில் வைரலான மமிதா பைஜூவின் நடன வீடியோ
Published on

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் உலகளவில் ரூ.83 கோடி வசூலை குவித்துள்ள 'டியூட்' படம் விரைவில் 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், கருத்த மச்சா பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடி பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com