என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் பண்ண தப்ப நீங்க பண்ணிடாதீங்க- இயக்குநர் லியோ ஜான் பால்க்கு அட்வைஸ் செய்த விஜய் ஆண்டனி
    X

    நான் பண்ண தப்ப நீங்க பண்ணிடாதீங்க- இயக்குநர் லியோ ஜான் பால்க்கு அட்வைஸ் செய்த விஜய் ஆண்டனி

    • தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களை எடிட் செய்தவர் இயக்குனர் லியோ ஜான் பால்.
    • விஜய் ஆண்டனி மார்கன் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

    மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.

    விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரு விறுவிறுப்பான இன்வஸ்டிகேஷன் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில் நான் பண்ண தப்ப நீங்க பண்ணிடாதீங்க என இயக்குநர் லியோ ஜான் பால்க்கு விஜய் ஆண்டனி அறிவுரை கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    "நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். நான் நடிகனானதும் இசையமைப்பதை விட்டு விட்டேன். தற்போது மீண்டும் இசையமைக்க உள்ளேன். நீங்களும் உங்களின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தை எடிட் செய்வதை விட்டு விடாதீர்கள். நீங்கள் ஒரு அற்புதமான எடிட்டர்.

    என விஜய் ஆண்டனி கூறினார்.

    Next Story
    ×