என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    10 நாட்களில் பைசன் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
    X

    10 நாட்களில் 'பைசன்' செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

    • துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • முதல்வர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.

    அந்த வகையில் படம் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    முதல்வர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பைசன் படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×