என்னுடைய முதல் படமான 'பைசன்'-ல் சம்பவம் பண்ணியிருக்காரு மாரி செல்வராஜ்: துருவ் விக்ரம்

திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன்.
என்னுடைய முதல் படமான 'பைசன்'-ல் சம்பவம் பண்ணியிருக்காரு மாரி செல்வராஜ்:  துருவ் விக்ரம்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது:-

நான் இதுவரை 2 படங்களில் நடித்து உள்ளேன். அவற்றை நீங்கள் பார்த்ததில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால் 'பைசன்' படத்தை பாருங்கள். இதைத்தான் என்னுடைய முதல் படமாகப் பார்க்கிறேன். நீங்களும் அப்படி பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இந்த படத்திற்காக மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளது.

என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன். இயக்குநர் மாரி செல்வராஜும் ரொம்ப உழைத்து, கஷ்டப்பட்டு இறங்கி சம்பவம் பண்ணியிருக்காரு. அது எல்லோருக்கும் போய் சேரணும். கண்டிப்பாக படத்திற்கு போங்கள் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com