என் மலர்
சினிமா செய்திகள்

21 வயதில் உயிர்நீத்த ராணுவ வீரரின் தந்தையாக தர்மேந்திரா.. அமிதாப் பச்சன் பேரன் நடித்த 'Ikkis' டிரெய்லர்
- டிசம்பர் 25 வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
- அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும்.
பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (89) கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் நடித்த கடைசி படம் 'இக்கிஸ்' டிசம்பர் 25 வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று 21 வயதில் வீரமரணமடைந்தவரும், பரம் வீர் சக்ரா விருது பெற்றவருமான அருண் கேத்ரபாலின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், தர்மேந்திரா அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார். அருணின் வேடத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா நடிக்கிறார்.
இந்த படத்தின் இறுதி டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






