என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    துள்ளுவதோ இளமை நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த தனுஷ்
    X

    துள்ளுவதோ இளமை நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த தனுஷ்

    • அபினய் பல்வேறு ஹீரோக்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தார்.
    • 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

    துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வருகிறார். அவரின் சிகிச்சைக்காக திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

    44 வயதான அபினய், தற்போது வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள் கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டியில், பல நாட்கள் அரசின் உணவகத்தில் வாங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தனது வாழ்க்கையின் நாட்கள் குறைந்து வருவதாகவும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

    அபினய், 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் நடித்த அவர், ஜங்க்ஷன் (2002), சிங்காரா சென்னை (2004), பொன் மேகலை (2005) போன்ற படங்களில் நாயகனாகவும், பின்னர் பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார். மேலும், மலையாளத் திரையுலகிலும் பணியாற்றினார்.

    நடிகராக மட்டுமின்றி, அபினய் பல்வேறு ஹீரோக்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தார்.

    சமீபத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறிய பாலா, அபினயை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கியிருந்தார். தற்போது தனுஷும் உதவி அளித்திருப்பது, திரையுலக நண்பர்கள் காட்டும் மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

    Next Story
    ×