என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Bison is a winner... பைசன் படத்தை பாராட்டிய முன்னணி பாலிவுட் இயக்குநர்
    X

    Bison is a winner... பைசன் படத்தை பாராட்டிய முன்னணி பாலிவுட் இயக்குநர்

    • பைசன் படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளது
    • பைசன் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    அந்த வகையில், பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா பைசன் படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மாரி செல்வராஜின் பைசன் மிக சிறந்த திரைப்படம். சாதியம், சுதந்திரம், வன்முறை, அடிமைத்தனம் போன்ற அம்சங்களை தைரியமாகவும் ஆழமான தாக்கத்துடனும் ஒரு ஒரு சிறந்த படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

    துருவ் விக்ரம் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் இந்த படத்தில் இந்தி பேசும் கதாபாத்திரங்கள் ஸ்டீரியோடைப்பாக இருந்தது மட்டும் தான் எனக்கு குறையாக இருந்தது. பைசன் ஒரு வெற்றி திரைப்படம். இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவை பகிர்ந்து பைசன் படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குநர் ஹன்சல் மேத்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×