என் மலர்
சினிமா செய்திகள்

கைதி பட நடிகருடன் ஜோடி சேரும் அன்னா பென்
- சென்னை, மங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
- படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜூடன் இணைந்து அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாகியாகவும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






