ஹவுஸ்புல் 5 படத்திற்கு முகமூடி அணிந்து ரிவ்யூ கேட்ட அக்ஷய் குமார் - வீடியோ வைரல்

ஹவுஸ்புல் 5 படம் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹவுஸ்புல் 5 படம் கடந்த 2 நாட்களில் ரூ. 50 கோடி வசூலை தாண்டியது.
ஹவுஸ்புல் 5 படத்திற்கு முகமூடி அணிந்து ரிவ்யூ கேட்ட அக்ஷய் குமார் - வீடியோ வைரல்
Published on

அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஹவுஸ்புல் 5 படம் கடந்த 2 நாட்களில் ரூ. 50 கோடி வசூலை தாண்டியது. இப்படம் முதல் நாளில் ரூ. 24 கோடியும், இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட ரூ. 30 கோடியும் வசூலித்துள்ளது.

இந்நிலையில், ஹவுஸ்புல் 5 படம் எப்படி இருக்கிறது என திரையரங்க வாசலில் நடிகர் அக்ஷய் குமார் முகமூடி அணிந்து ரிவ்யூ கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அவரை முகமூடி அணிந்திருந்ததால் ரசிகர்கள் யாரும் இவரை அடையாளம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com