என் மலர்
சினிமா செய்திகள்

அகண்டா 2- திரைவிமர்சனம்
அகண்டா முதல் பாகத்தில் தனது தம்பி மகள் ஹர்ஷாலிக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அங்கு நான் வருவேன் என அகண்டா சத்தியம் செய்திருந்தார். இதில், இருந்து 2ம் பாகம் தொடர்கிறது. ஆண்டுகள் கடந்து செல்ல பாலைய்யாவின் மகள் நன்றாக வளர்ந்து விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் எதிர்நாட்டில் உள்ள ஜெனரல், இந்தியர்களை கொன்று குவிக்கிறார்.
கடவுள் நம்பிக்கையுள்ள இந்திய மக்கள், இனி கடவுளே ஒருவர் இல்லை என்று கடவுளை வெறுக்கும் வகையில் முடிவு கட்ட திட்டமிடுகிறார் எதிர்நாட்டு ஜெனரல். இதற்காக, நாட்டில் உள்ள அரசியல்வாதியுடன் கைகோர்த்து மகா கும்பமேளாவிற்கு வரும் மக்கள் மேல் வைரஸை பரப்பி விடுகிறார்கள்.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. நாடு முழுவதும் பிரச்சனை வெடிக்கிறது. அப்போது, கடவுளே இல்லை என வெறுக்கும் மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்தநிலையில், விஞ்ஞானியான பாலைய்யாவின் மகள் ஹர்ஷாலி, பரவிக் கொண்டிருக்கும் வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கிறார். இது எதிரி நாட்டிற்கு தெரிய வர, விஞ்ஞானிகள் குழுவையும் அழிக்கிறது.
அங்கிருந்து தப்பிக்கும் ஹர்ஷாலியை கொலை செய்ய அந்த கூட்டம் துரத்துகிறது.எதிரி கூட்டத்திடம் இருந்து ஹர்ஷாலியை காப்பாற்ற அகண்டா வந்தாரா? வைரசை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மக்களிடம் கொண்டு சேர்த்தாரா? மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை வந்ததா? என்பது படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்துள்ள பாலகிருஷ்ணா அவருக்கே உரிதான நடிப்பில் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். சண்டை, நடனம், வசனம் என அனைத்திலும் மாஸ். பாலய்யா ரசிகர்களுக்கு அகண்டா 2 ஸ்பெஷல் விருந்து என்றே சொல்லலாம்.
அகண்டா கதாபாத்திரத்தை தவிர வேறு யாருக்கும் வலுவான ரோல் இல்லை.படம் முழுவதும் பாலய்யாவின் மேஜிக்தான் நிறைந்திருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் லாஜிக் எதிர்க்காமல் வந்தால் நல்லது.
இயக்கம்
பாலகிருஷ்ணா என்ற கூர்மையான ஆயுதத்தை 4-வது முறையாக பட்டை தீட்டி இருக்கும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, இந்த முறையில் மாஸ் கதையை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
இசை
தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.
ஒளிப்பதிவு
அகண்டா 2 படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.






