என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அப்பாஸ் ரீ-என்ட்ரி.. பூஜையுடன் தொடங்கிய ஜி.வி. பிரகாஷ் புதிய படம்
    X

    அப்பாஸ் ரீ-என்ட்ரி.. பூஜையுடன் தொடங்கிய ஜி.வி. பிரகாஷ் புதிய படம்

    • கடைசியாக 2014-ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனருமான மரியா ராஜா இளஞ்செழியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    90-களில் தமிழ் சினிமாவின் இளம்பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 'சாக்லேட் பாய்' அப்பாஸ் 11 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்புகிறார்

    கடைசியாக 2014-ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் காணப்பட்ட அப்பாஸ், தற்போது ஒரு புத்தம் புதிய நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.

    இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் 'லவ்வர்' பட நாயகி ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்கிறார்.

    'லவ் டுடே' படத்தின் வெற்றிக்கு உதவியவரும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனருமான மரியா ராஜா இளஞ்செழியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதன் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான Beyond Pictures வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×