ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது.இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com