என் மலர்
சினிமா செய்திகள்

அமீர் கானின் ரகசிய குழந்தை - யார் இந்த ஜெஸிக்கா?
- அமீர் கான் சமீபத்தில் பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
- ஜெஸிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரைக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
அமீர் கான் சமீபத்தில் பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் மீது அவரது சகோதரர், நடிகர் ஃபைசல் கான் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலால் மீண்டும் சர்ச்சை உருவாக்கியுள்ளன. இன்று மும்பையில் நடைபெற்ற புகைப்பட அறிக்கை நிகழ்ச்சியில் ஃபைசல், அமீர் மீது பலம் மிகுந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஃபைசல் கான் தெரிவித்ததாவது, அமீர் தனது முதல் மனைவி ரீனா தட்டாவுடன் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்துக்குப் பிறகு, பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ஜெஸிக்கா ஹைன்ஸ் உடன் உறவு கொண்டார். இந்த உறவில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்து உள்ளதாகவும் அவர் முன்வைத்தார்.
யார் இந்த ஜெஸிகா ஹைன்ஸ்?
ஜெஸிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரைக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவருக்கும் இந்தி திரைத்துறைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. இவர் நடிகர் அமிதாப் பச்சனின் ஆவணப்படத்தில் பணியாற்ற இந்தியா வந்தார். அமீர் கான் மற்றும் ஜெஸிக்கா இருவரும் 2005 ஆம் ஆண்டு குலாம் திரைப்பட படப்பிடிப்பின் போது சந்தித்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது இவர்கள் இருவருக்கும் உறவு ஏற்பட்டு அதனால் ஜெஸிக்கா கர்ப்பமானாள், அந்த கருவை அமீர்கான் கலைக்க சொன்னதாகவும் ஆனால் ஜெஸிக்கா அதனை மறுத்து 2000 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அவருக்கு ஜான் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு ஜெஸிக்கா லண்டனை சேர்ந்த தொழிலதிபர் வில்லியமை திருமணம் செய்துக் கொண்டார்.
சமீபத்தில் ஜானின் புகைப்படம் ஒரு புகழ் பெற்ற பத்திரைக்கையில் வந்தது, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தற்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமீர்கான் தரப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் ஃபைசல் கான் கூறுவது வன்மம் நிறைந்துள்ளதாக இருக்கிறது. அதில் எதும் உண்மைதன்மை இல்லை என பதிலளித்துள்ளனர்.






