என் மலர்
சினிமா செய்திகள்

2026-ஐ குறி வைக்கும் சூர்யா... ரசிகர்கள் செம ஹாப்பி
- ‘சூர்யா46’ அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
- ‘சூர்யா47’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.
'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, நஸ்ரியா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் அடுத்தாண்டு இந்த 3 படங்களும் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று படங்களும் வெவ்வேறு மொழி இயக்குநர்களுடன் மூன்று வெவ்வேறு கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.






