என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    துஷாரா விஜயன்
    X
    துஷாரா விஜயன்

    சார்பட்டா நடிகையின் சாகசம்... வைரலாகும் வீடியோ

    'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயனின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
    இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரு குழுக்கள் இடையான மோதலை மையக்கருத்தாக வைத்து உருவான படம் 'சார்ப்பட்டா பரம்பரை'. பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ஷபீர், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் என பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் துஷாரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. 

    துஷாரா விஜயன்

    'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துஷாரா விஜயன், அநீதி, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள துஷாரா. ஸ்கை டைவிங் செய்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


    Next Story
    ×