என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கே.ஜி.எஃப்-2
    X
    கே.ஜி.எஃப்-2

    கே.ஜி.எஃப்-2 படத்தின் இரண்டாம் நாள் வசூலை வெளியிட்ட படக்குழு

    யாஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் இரண்டாம் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளனர்.
    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    கே.ஜி.எஃப்-2 படத்தின் வசூல்
    கே.ஜி.எஃப்-2 படத்தின் வசூல்

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி கே.ஜி.எஃப்-2 படம் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    Next Story
    ×