என் மலர்
சினிமா செய்திகள்

டி.இமான்
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

டி.இமான்
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான், தற்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story