search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெற்றிமாறன்
    X
    வெற்றிமாறன்

    நான் எழுதவே மாட்டேன் - இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் அமீர் இணைந்திருக்கும் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்றிமாறன் பேசியது.
    2007-இல் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் வெற்றிமாறன். அதன்பிறகு ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தார். தற்போது இவர் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். 

    வெற்றிமாறன்
    வெற்றிமாறன்

    சமீபத்தில் வெற்றிமாறன் மீண்டும் இயக்குனர் அமீருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியாதவது, ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்தகதையை சொன்னார். அதற்கப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டோம். ஒரு சமயத்தில் இந்தக்கதை எடுக்கலாம் என தோன்றியது. வழக்கமாக நான் எழுதவே மாட்டேன் ஆனால் இந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன், ஆனால் அப்போது செய்ய முடியவில்லை. கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன். கதையில் நான் சில மாற்றங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினேன். நான் இந்த கதையை எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் நான் எடுக்கவா என்றார். அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர் திரைக்கதையில், சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார். இன்றைய காலகட்ட பிரச்சனையை சரியான விசயங்களை சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசினார்.
    Next Story
    ×