என் மலர்tooltip icon

    சினிமா

    முதல்வர் முன்னிலையில் காசோலை வழங்கிய சூர்யா
    X
    முதல்வர் முன்னிலையில் காசோலை வழங்கிய சூர்யா

    இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
    சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்
    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
    Next Story
    ×