என் மலர்tooltip icon

    சினிமா

    ஶ்ரீதேவி
    X
    ஶ்ரீதேவி

    மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி

    நடிகர் விஜயகுமாரின் மகளும், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த பிரபல நடிகையுமான ஸ்ரீதேவி, தனது மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டிருக்கிறார்.
    1992ம் ஆண்டு வெளியான ரிக்சா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

    படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் குடும்பத்துடன் வசித்து வரும் ஸ்ரீதேவி, தனது மகளின் 5வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். 

    ஶ்ரீதேவி

    அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
    Next Story
    ×