என் மலர்tooltip icon

    சினிமா

    ராஜ்கிரண், அதர்வா
    X
    ராஜ்கிரண், அதர்வா

    ‘களவாணி’ இயக்குனருடன் கூட்டணி அமைத்த ராஜ்கிரண் - அதர்வா

    தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை சற்குணம் இயக்க உள்ளார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

    இதையடுத்து நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படத்தை வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அஜித்தின் விஸ்வாசம் போன்ற பட பாணியில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சற்குணம், அதர்வா
    சற்குணம், அதர்வா

    இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் அதர்வா, ராஜ்கிரணுக்கு பேரனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
    Next Story
    ×