என் மலர்
சினிமா

நந்திதா ஸ்வேதா
சீரியலில் நந்திதா ஸ்வேதா... ரசிகர்கள் அதிர்ச்சி
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

இந்நிலையில் அபியும் நானும் சீரியலின் சிறப்பு ஒரு மணி நேர காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பிரபல இளம் ஹீரோயின் நந்திதா ஸ்வேதா சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரைக்கு நந்திதா ஸ்வேதா வந்து விட்டதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Next Story






