என் மலர்
சினிமா

பார்த்திபன்
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், தனது பதிவுக்கு பதில் அளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.
சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். மேலும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...' என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் பல தலைப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், புதிதாய் இன்று பிறக்கிறோம், எளிதாய் சிரமம் கடக்கிறோம். பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம். ஹிந்தி தலைப்பு -அள்ளி வழங்கிய, எண்ணிலடங்கா -எதிர்பாரா கோணங்களில். பலரது பாராட்டுக்குரியது, சிலது சிறப்பு! அனைத்தும் பரிசீலனையில். விரைவில் தேர்வாகும். பங்குக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி! என்று பதிவு செய்து இருக்கிறார்.
புதிதாய் இன்று பிறக்கிறோம்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 9, 2021
எளிதாய் சிரமம் கடக்கிறோம்.
பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம்.
ஹிந்தி தலைப்பு -அள்ளி வழங்கிய,
எண்ணிலடங்கா -எதிர்பாரா கோணங்களில் .
பலரது பாராட்டுக்குரியது,
சிலது சிறப்பு!
அனைத்தும் பரிசீலனையில்.
விரைவில் தேர்வாகும்.
பங்குக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி!
Next Story






