என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை - சிம்பு பட நடிகை திட்டவட்டம்
Byமாலை மலர்9 May 2021 11:48 AM GMT (Updated: 9 May 2021 11:48 AM GMT)
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன் என சிம்பு பட நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லிகர்' படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது.
இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது: “தற்போது எனது வேலையில் சிறந்த ஒரு கால கட்டத்தில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” என தெரிவித்துள்ளார்.
Next Story
×