search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஷங்கர், இந்தியன் 2 படத்தின் போஸ்டர்
    X
    ஷங்கர், இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

    இந்தியன் 2 விவகாரம்.... லைகா - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

    இந்தியன் 2 பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாம்.
    நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

    ஷங்கர்

    அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமையன்று, ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை எனவும், ஜூன் மாதத்திலேயே படத்தை முடித்துக் கொடுக்க லைகா நிறுவனம் வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். 
    Next Story
    ×