என் மலர்
சினிமா

கமல் - டி.என்.எஸ்
தயாரிப்பாளரும், கமலின் முன்னாள் மேனேஜருமான டி.என்.எஸ் காலமானார்
தயாரிப்பாளரும், நடிகர் கமலுக்கு பல ஆண்டுகளாக மேனேஜராக பணியாற்றியவருமான டி.என்.எஸ். காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக பயணித்தவர் டி.என்.எஸ் என்கிற டி.என்.சுப்ரமணியம் இன்று காலமானார். இவர் கமலை வைத்து குணா என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்திருக்கிறார்.

மேலும் பிரபு, குஷ்பூ, ரஞ்சிதா நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான "சின்ன வாத்தியார்" என்கிற படத்தையும் டி.என்.எஸ். தயாரித்து இருக்கிறார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story






