என் மலர்

  சினிமா

  தாண்டவ் வெப் தொடர் போஸ்டர்
  X
  தாண்டவ் வெப் தொடர் போஸ்டர்

  ‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு - பகிரங்க அறிவிப்பால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஒரு அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  இந்தியில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சயீப் அலிகான். இவர், தாண்டவ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். தாண்டவ் வெப் தொடரில் இந்து மத கடவுளை அவமதித்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

  இதுதொடர்பாக நாட்டில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகர் சயீப் அலி கான், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், ‘தாண்டவ்’ வெப் தொடர் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
  Next Story
  ×