search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நமீதா கிண்ற்றில் விழும் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த புகைப்படம்
    X
    நமீதா கிண்ற்றில் விழும் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த புகைப்படம்

    படப்பிடிப்பின் போது கிணற்றில் விழுந்த நமீதா.... பதறியடித்து காப்பாற்ற ஓடிய மக்கள்

    படப்பிடிப்பின் போது நடிகை நமீதா கிணற்றில் விழுந்ததை பார்த்து பதறிப்போன கிராம மக்கள் அவரை காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா, பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

    ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பை பார்க்க அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு நின்றனர். 

    நமீதா

    ஒரு கிணற்றின் அருகில் நமீதா நடந்து சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த செல்போன் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. உடனே பதற்றத்தில் அதை தாவிப் பிடிக்க முயன்ற நமீதா கிணற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன மக்கள் நமீதாவை காப்பாற்ற கிணற்றின் அருகே ஓடினார்கள். அவர்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர். 

    அதன்பிறகு தான் அதுவும் படப்பிடிப்பு என தெரிய வந்தது. அது படத்தின் ஒரு காட்சி என்பதை மக்களுக்கு புரியவைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் பக்கத்து கிராமங்களுக்கு படப்பிடிப்பில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×