என் மலர்
சினிமா

அபர்ணதி
தேன் இன்று தித்திக்கிறது - அபர்ணதி
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான அபர்ணதி, தேன் இன்று தித்திக்கிறது என்று கூறியிருக்கிறார்.
சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது தேன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே பல விருதுகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றுள்ளது. தற்போது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
தான் நடித்த படம் விருதுகளை குவித்து வருவது குறித்து அபர்ணதி கூறும்போது, ‘எனது நடிப்பில் வெளியாகவிருக்கும் 'தேன்' திரைப்படத்திற்குத் தாங்கள் அனைவரும் அளித்துவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'தேன்' திரைப்படம் குறித்து தங்களின் நேர்மறை விமர்சனங்களும், செய்திகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், 'தேன்' திரைப்படம் 51-வது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகத் தேர்வாகியுள்ளது. இதற்காக, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் விநாயக், ஏபி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் அம்பலவானன்.பி, பிரேமா.பி மற்றும் ஹீரோ தருண் குமார், குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ, துணை நடிகர்கள் பவா லக்ஷ்மணா, அருள் தாஸ், கயல் தேவராஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், வசனகர்த்தா ராசி தங்கதுரை, கலை இயக்குநர் மாயபாண்டி ஆகியோருக்கும் நன்றி கூறுகிறேன். படத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறந்த பங்களிப்பையும், ஆதரவையும் நினைவு கூர்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் தான் 'தேன்' இன்று தித்திக்கிறது.
இதேபோல், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் எனது அடுத்தத்தத் திரைப்படமான 'ஜெயில்' படத்திற்கும் தங்களின் ஒத்துழைப்பு தொடர வேண்டுகிறேன்’ என்றார்.
Next Story






