என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷை பின் தொடரும் ஹாலிவுட் பிரபலம்
By
மாலை மலர்23 Sep 2020 1:55 PM GMT (Updated: 23 Sep 2020 1:55 PM GMT)

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷை ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் பின் தொடர்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவருடைய இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.
'கோல்ட் நைட்ஸ்' என்ற ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவானது. செப்டம்பர் 17ம் தேதி வெளியான இந்த பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாராட்டுக்களை குவித்தது.

தற்போது இந்த பாடலை ஹாலிவுட் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரால் விரும்பப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜஸ்டின் பீபர் டுவிட்டரில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை பாலோ செய்யவும் தொடங்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×