என் மலர்
சினிமா

ரஜினி, கமல், சின்னிஜெயந்த்
சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து
சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் சின்னி ஜெயந்த். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய் சமீபத்தில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன், தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தானும் பெருமைப்படுவதாக கூறியுள்ள ரஜினி, கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்தால் நேரடியாக வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் என்று தெரிவித்தாராம்.
Next Story






