என் மலர்tooltip icon

    சினிமா

    அஜய் ஞானமுத்து
    X
    அஜய் ஞானமுத்து

    சம்பளத்தை பாதியாக குறைத்த கோப்ரா பட இயக்குனர்

    தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

    அஜய் ஞானமுத்து, விக்ரம்

    இந்நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம். கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளதால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், சம்பள குறைப்பு செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×