என் மலர்
சினிமா

அஜய் ஞானமுத்து, விக்ரம்
விக்ரம் பிறந்தநாளன்று கோப்ரா டீசர் வெளியாகுமா? - இயக்குனர் விளக்கம்
விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி கோப்ரா படத்தின் டீசர் வெளியிடப்படுமா என்பது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இதனால் கோப்ரா படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் விக்ரம் ரசிகர் ஒருவர், கோப்ரா டீசர் விக்ரம் பிறந்தநாளுக்கு வெளியாகுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், கொரோனா ஊரடங்கால் டீசரை தற்போது வெளியிட முடியாது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.
Next Story






