search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜெய் ஆகாஷ்
    X
    ஜெய் ஆகாஷ்

    ஜெய் ஆகாஷ் எடுக்கும் புதிய முயற்சி

    தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ஜெய ஆகாஷ், ரசிகர்கள் வீட்டிலேயே படம் பார்ப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருப்பவர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அடங்காத காளை’ என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து,  இயக்கி வருகிறார். இவர் தற்போது ரசிகர்கள் படம் பார்க்க புதிய மோபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

    இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது, ‘தற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் இன்ஜினியர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது ரகசியம். 

    நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். 

    ஜெய் ஆகாஷ்

    இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி எனது பிறந்த நாளன்று A Cube  ஆப்பை வெளியிடுகிறோம். இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது. 

    நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம். 

    எனது அடுத்த படம் “புதிய மனிதன்” தெலுங்கில் “கொத்தகா உன்னாடு” என்றும் வரும் படம் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும். வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 

    நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக A Cube ஆப் இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×