search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதி
    X
    விஜய் சேதுபதி

    பேய் பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

    திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் 'பேய் இருக்க பயமேன்' என்ற படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
    திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் 'பேய் இருக்க பயமேன்'. ஜோஸ் பிராங்க்லின் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    இப்படத்தைப் பற்றி இயக்குனர் கார்த்தீஸ்வர்ன் கூறும்போது, ‘இப்படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது. பேயை பார்த்து யாரும் பயப்பட கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம் என்பதை மையக்கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த பேய் இருக்க பயமேன்.

    பேய் இருக்க பயமேன்

    இப்படம் குழந்தைகளை பெரிதும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மூணாறு மற்றும் மறையூர் காட்டுப்பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது.

    கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது’ என்றார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
    Next Story
    ×