search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வால்டர் படத்தில் சிபிராஜ்
    X
    வால்டர் படத்தில் சிபிராஜ்

    ஆடி பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட, இனிமேல் ஆட்டத்தை பாரு - வால்டர் டீசர்

    அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் வால்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்கிறார். மேலும் ரித்விகா, சனம் ஷெட்டி, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

    சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். வித்தியாசமான திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.


    இந்த டீசர் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரில் ‘ஆடி பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட, இனிமேல் ஆட்டத்தை பாரு’ என்ற வசனம் ரசிர்களை கவர்ந்துள்ளது.
    Next Story
    ×