என் மலர்tooltip icon

    சினிமா

    சூர்யா, ஷங்கர்
    X
    சூர்யா, ஷங்கர்

    புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது- ஷங்கர்

    புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தனக்கு தெரியாது என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
    சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர் ஷங்கர் வாக்களித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், "நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது; நான் அதை படிக்கவில்லை” என கூறினார். 

    ஷங்கர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த சீமான், உயர்ந்த நிலையிலுள்ள இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான் என தெரிவித்தார்.
    Next Story
    ×