என் மலர்

  சினிமா

  கொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
  X

  கொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
  ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். 

  மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.  தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 
  Next Story
  ×