என் மலர்

  சினிமா

  17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்
  X

  17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது ரவுண்டில் பல படங்களில் நடித்து வரும் சிம்ரன், தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். #Simran
  இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.

  நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.  இந்தப் படத்தை அவருடன் இணைந்து ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பாலசந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் படத்தில் மீண்டும் இணைய உள்ளனர்.
  Next Story
  ×