search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
    X

    காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா

    கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் காதல் கலந்த காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ரைசா ஒப்பந்தமாகி உள்ளார். #GVPrakashKumar #RaizaWilson
    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் சர்வம் தாள மயம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    தொடர்ந்து, 100% காதல், ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மேலும் வாட்ச்மேன், அடங்காதே, ஜெயில், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் ஜி.வி. நடித்து முடித்திருக்கிறார். 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


    இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தை ஆரா சினிமாஸ் சார்பில், மகேஷ்.ஜி தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. #GVPrakashKumar #RaizaWilson

    Next Story
    ×