என் மலர்
சினிமா

நயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா
தமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா வழியை நடிகை ரைசாவும் பின் பற்ற தொடங்கி இருக்கிறார். #Nayanthara #Anushka #Raiza #HappyPongal2019
தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப்படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, ஒய்.எஸ்.ஆர் என்கிற சொந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் "பியார் பிரேமா காதல்" என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.
தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பியார் பிரேமா காதல் வெற்றி படத்தில் கதாநாயகியாக நடித்த ரைசா வில்சன் நடிக்கும் புதிய படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘ஆலிஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.

முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் நிலையில், ரைசாவும் இவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
Next Story






