என் மலர்
சினிமா

23 நாட்களில் படமான என் காதலி சீன் போடுறா
ராம்சேவா இயக்கத்தில் அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிப்பில் உருவாகி இருக்கும் `என் காதலி சீன் போடுறா' படத்தின் படப்பிடிப்பை 23 நாட்களில் படமாக்கி முடித்துள்ளனர். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்துள்ள படத்திற்கு `என் காதலி சீன் போடுறா' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ராம்சேவா இயக்கியிருக்கும் இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி கோகுல் நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.
அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வெங்கட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது,
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப்போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.
23 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu
Next Story